அரசியல் தீர்வு வாக்குறுதியை எப்படி நம்புவது? – அரசாங்கத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

suresh

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் வெளியிட்ட கருத்தை நம்ப முடியாது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த அதிருப்தியை வெளியிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் போன்ற உடனடித் தீர்வுகளைக் கூட இன்னும் வழங்கவில்லை.

முப்படைகளின் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி நினைத்தால் வடக்கில் காணிகளை விரைவாக விடுவிக்க முடியும். ஆனால், நடைமுறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக் கூட காணி விடுவிப்பு இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

13-ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படும் என அரசு கூறுகிறது. அப்படியாயின் அதற்குப் பதிலாக வரப்போவது சமஷ்டியா (Federalism) அல்லது வேறெந்த அதிகாரப் பகிர்வு முறைமை? இது குறித்து ஜனாதிபதியோ அல்லது ரில்வின் சில்வாவோ இதுவரை வாய் திறக்கவில்லை” என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால அரசுகளைப் போலவே இந்த அரசும் வெறும் சொல்லளவில் மட்டும் உறுதிமொழிகளை வழங்கித் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக அவர் சாடினார். உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திச் செயலில் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

 

Exit mobile version