இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், தற்போது அது சர்ச்சையில் முடிந்துள்ளது.
கடந்த 2020 – மே மாதம் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில், அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்து பிரதமர் தனது அலுவலக வெளிப்பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உட்பட இங்கிலாந்தின் எதிர்க்கட்சிகளும் அவரை கடும் விமர்சனம் செய்தன. இந்நிலையில், பிரதமர் போரீஸ் ஜான்சன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.
கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டமை தவறே. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் – என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
#World