சிலியில் ஒருபாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு பாராளுமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா ஆதரித்துள்ளதுடன் அவருடைய பழைமைவாத கூட்டணி உறுப்பினர்களின் கடும் விமர்சனத்திற்கு இந்த சட்டமூலம் உள்ளாக்கப்பட்டுள்ளது.
சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஒருபாலின தம்பதிகளுக்கு இடையே இருக்கும் சிவில் ஒன்றிணைவுகளை சிலி அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#World