தீ விபத்து! – பல லட்சம் பெறுமதியான பொருள்கள் நாசம்!!

மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில்  இடம்பெற்றது.

WhatsApp Image 2021 09 03 at 13.36.26

வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு அங்கு வசிக்கும் பெண், வீட்டைப் பூட்டிவிட்டு ஆலயம் சென்று திரும்பிய நிலையில் வீட்டுக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் படைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Exit mobile version