articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

Share

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச் செல்லத் தயாரில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் முன்வைத்த பிரதான கோரிக்கைகள் வருமாறு:

தோட்டத் தொழிலாளர்கள் தற்போதைய சூழலில் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களுக்குத் தலா 7 பேர்ச் காணியை வழங்கி, நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக 5,000 ஏக்கர் காணிகளை ஒதுக்கினால் போதுமானது. இதன் மூலம் பெருந்தோட்டத் துறைக்கு எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தோட்டக் கம்பெனிகளுடன் கலந்தாலோசித்து, தொழிலாளர்களின் காணி மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து எந்தவொரு உறுதியான வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலர் தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தது வரவேற்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் காலத்தில் செய்ய முடியாததை உங்கள் காலத்திலாவது செய்து கொடுங்கள்” என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ராதாகிருஷ்ணன் எம்.பி., மலையக சமூகம் இனிமேலும் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ முடியாது எனவும், அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக முழு உரிமையுடன் வாழ வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கைக்கு இக்கட்டான நேரங்களில் உதவி வழங்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...