கட்டுப்பாட்டு விலை – மீறின் 1977 க்கு முறையிடுக
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மற்றும் சீனி விற்பனை செய்தால் உடன் 1977க்கு முறையிடவும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவித்துள்ளார்.
அரிசி மற்றும் சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நேற்று இரவு முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த விலையை விட அதிக விலைக்கு வர்த்தக நிறுவனமோ அல்லது கடைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.