கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாக்கியத்தில் 53 பேர் சாவடைந்துள்ளர்.
இச்சம்பவம் தென் மெக்சிக்கோவில் இடம்பெறுள்ளது.
தென் மெக்சிக்கோவில் கனரக வாகனமொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் சாவடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதில் பலரின் நிலைமை மிக மோசமாகவுள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமெரிக்காவை சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாக்கியது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கனரக வாகனத்தில் 100க்கும் அதிகமானவர்கள் இருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு வாகன விபத்து தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world