நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதி, சீர் செய்யப்பட்ட பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் மற்றும் தடைகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஹட்டன் – கண்டி பஸ் போக்குவரத்தைத் தவிர, ஏனைய இடங்களுக்கான பஸ் பயணங்கள் அனைத்தும் ஹட்டனிலிருந்து இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுத் துண்டிக்கப்பட்டிருந்த மத்திய மலைநாட்டுப் பகுதிகளின் போக்குவரத்துச் சேவையை மீட்டெடுப்பதில் ஒரு முக்கிய படியாக அமைகிறது.

