பாடசாலை மாணவர்கள் சத்தற்ற சிற்றுண்டிகளை உண்பது அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

images 13 2

அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய, ஊட்டச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை (Junk Food) அதிகமாக உட்கொள்வதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளைச் சேர்ந்த 463 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மாணவர்களின் அன்றாட உணவு பெரும்பாலும் அரிசி மற்றும் மா சார்ந்த உணவுகளாகவே காணப்படுகின்றன. அதேநேரம் காய்கறிகள், கீரைகள் மற்றும் தானியங்களின் நுகர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

ஆரோக்கியமற்ற தேர்வுகள்: இளம் பருவத்தினர் மத்தியில் துரித உணவுகள், சீனி கலந்த பானங்கள் மற்றும் சத்தற்ற சிற்றுண்டிகளின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது.

தனியார் பாடசாலை மாணவர்களுடன் ஒப்பிடும்போது, அரச பாடசாலை மாணவர்கள் உடல் ரீதியான செயல்பாடுகளில் குறைவாகவே ஈடுபடுகின்றனர்.

தமது பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்துப் பெற்றோர்கள் மிகக் குறைந்த அளவிலேயே அக்கறை செலுத்துவதும் இந்த ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் மத்தியில் அதிகரித்து வரும் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்த, பாடசாலை உணவுத் திட்டங்களில் முறையான மாற்றங்கள் அவசியம் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

 

 

Exit mobile version