எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை HNB SOLO அலைபேசி செயலியின் பாவனைகள் தொடர்பில் மேலதிக விளக்கங்களை ஹற்றன் நஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கியின் மெட்ரோ கிளை வளாகத்தில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் டிஜிட்டல் வங்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளது.
இச் செயலியின் ஊடாக QR குறியீடுகளை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள இயலும். மின்சார கட்டணங்கள், நீர் கட்டணங்கள், தொலைபேசி, இன்டர்நெட் கட்டணங்கள் மற்றும் காப்புறுதித் தவணைகள் போன்றவற்றை செலுத்திக் கொள்ள இயலும்.
#SriLankaNews