தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை பியூமி ஹன்சமாலியிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பியூமி ஹன்சமாலி நேற்று (அக்டோபர் 21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
அவரது வாக்குமூலங்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த மேலும் பல மொடல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மேலும் பல மொடல்கள் மற்றும் நடிகைகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.