images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

Share

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

புரூக்ளின் சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மான்ஹாட்டன் கொண்டு வரப்பட்ட மதுரோ, 92 வயது மூத்த நீதிபதி ஆல்வின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். சிறை உடையில், கைவிலங்கிடப்பட்ட நிலையில் நொண்டியபடி வந்த மதுரோ, அதிகாரிகளுடன் சிரித்துப் பேசியபடி காணப்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவைப் போதைப்பொருள் சந்தையாக மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தற்காப்புக்காக வாதிட வழக்கறிஞர்கள் எவரும் முன்வராத நிலையில், மதுரோ தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மதுரோவின் 10 பில்லியன் டொலர் (சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி) மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.

தனது தந்தையின் கைது குறித்துப் பேசிய மதுரோவின் மகன் குரேரா, கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களுடன் இருந்து கொண்டே சிலர் துரோகம் இழைத்துவிட்டனர். அந்தத் துரோகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். எனது தந்தையைக் கைது செய்த அமெரிக்காவை நாங்கள் கண்டிப்பாகப் பழிதீர்ப்போம்.”

இதற்கிடையில், திங்கட்கிழமை பதவியேற்ற இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் சமரசப் போக்கைக் கையாண்டு வருகிறார். இது மதுரோவின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...