அங்கொட, முல்லேரியா பகுதியில் இன்று அதிகாலை 34 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாதாளக்குழு தலைவர் அங்கொட லொக்காவின் சகா ஒருவராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரும் பாதாளகுழுவுடன் தொடர்புபட்டவரென தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
#SriLankaNews