அவுஸ்திரேலிய இலங்கையரால் கின்னஸ் சாதனை முறியடிப்பு!!

271564953 4622627671156762 8158589232996740293 n
அவுஸ்திரேலியாவில்  வசிக்கும்  இலங்கையரான  திமோதி சனன் ஜெபசீலன்  என்பவர் 393 அடி 3 அங்குல உயரத்தில் இருந்து வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
2019 இல் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டன் பாம்கார்ட்னர் படைத்த  114 மீற்றர் (374 அடி) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், கின்னஸ் உலக சாதனை பட்டத்தை முறியடிப்பது எனது கனவு. சிறுவயதில் இருந்தே இதைப் பற்றி கனவு காண்கிறேன் என்றார்.

#Sports

Exit mobile version