Sarath Weerasekera
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் புலிகளுக்கு அஞ்சிச் செயல்படுகிறது – சுதந்திர தின விழா குறித்து சரத் வீரசேகர காட்டம்!

Share

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் இராணுவ அணிவகுப்புகள் மற்றும் வர்ணனைகள் கையாளப்பட்ட விதம் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இன்றைய அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் திருப்திப்படுத்தவே இவ்வாறான ‘மென்மையான’ போக்கைக் கடைப்பிடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

1948 இல் சுதந்திரம் கிடைத்திருந்தாலும், 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதே நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர தின அணிவகுப்பின் போது, இலங்கை இராணுவத்தின் விசேட மற்றும் கொமாண்டோ படையினரை வர்ணித்தவர், அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. மாறாக, ‘டித்வா சூறாவளியில்’ மக்களைப் பாதுகாத்தவர்கள் என்றே குறிப்பிட்டார். இது இராணுவத்தின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என அவர் சாடினார்.

2009 இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய கனரக வாகனங்கள் மற்றும் ‘மல்டி பெரல்’ (Multi-barrel) ஏவுகணைத் தளபாடங்கள் இம்முறை வாகனத் தொடரணியில் சேர்க்கப்படவில்லை. இது அரசாங்கத்தின் முதுகெலும்பில்லாத செயலாகும் என அவர் தெரிவித்தார்.

இந்தச் சுதந்திர தின விழா தேசியத்தைக் கொண்டாடுவதற்காக நடத்தப்படவில்லை எனத் தெரிவித்த சரத் வீரசேகர, தமிழ் பிரிவினைவாதிகளையும் புலம்பெயர் தமிழர்களையும் சந்தோஷப்படுத்துவதற்காகவே அரசாங்கம் அவர்களின் ‘மனம் நோகாதபடி’ நடந்துகொள்வதாகக் காரசாரமாகத் தெரிவித்தார். இலங்கையின் எந்தவொரு முந்தைய அரசாங்கமும் இவ்வளவு பலவீனமாகச் செயல்பட்டதில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...