வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி முன்மொழிவு ஆளுநரிடம் கையளிப்பு: ஆசிரியர் ஆளணி சீராக்கம் குறித்து கலந்துரையாடல்!

images 2 1

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே இன்று (அக் 21) ஆளுநர் செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் கையளித்தது.

ஆசிரிய ஆளணிச் சீராக்கம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளிடம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படாமைதான் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்று ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியது.

Exit mobile version