உரத்தின் இறக்குமதியை அதிகரித்தது அரசு!!

image 1

இறக்குமதி செய்யும் உரத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊரச்செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது.

பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews

 

Exit mobile version