அபுதாபியில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிரொலியாக மறுஅறிவித்தல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு தடைவிதிப்பதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேலைகளுக்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேவைக்கான விதிவிலக்கு மற்றும் அனுமதி பெற்றுக் கொள்ள முடியும்.
சவுதி தலைமையிலான ராணுவ கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பிடித்துள்ளது. ஏமன் உள்நாட்டு சண்டையில் சவுதி கூட்டுப்படை ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதனால் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#World