கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு நடத்திய வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இனக்குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர் போர் நடந்து வரும் நிலையில், இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனக்குழுக்களின் ஆயுத கிடங்கின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் குறித்த வான் தாக்குதல் குடியிருப்புகள் மீது நடந்ததாக உள்ளூர் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
#world