25 69222852bdb1d
செய்திகள்உலகம்

கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்: Gemini AI இணைப்புடன் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி!

Share

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் (Google Maps) இருந்தால் போதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்றுவிடலாம். அந்த அளவிற்குப் பிரபல வழிகாட்டிச் சேவை தளமாக இது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூகுள் மேப்ஸ் பல புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது.

கூகுள் மேப்ஸ், கூகுளின் ஏ.ஐ.யான ஜெமினியுடன் (Gemini AI) இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் செல்போனைத் தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.

கூகுள் மேப்ஸ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள போக்குவரத்துத் தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான துல்லியமான தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக் கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களைக் கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.

இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது. பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுள் வாலட் (Google Wallet) இணைப்பும் வழங்கப்படுகிறது.

கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்டவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாடுகள், கூகுள் மேப்ஸின் பயண வழிகாட்டுதல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...