தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

gold 5

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05) ஒரு பவுண் தங்கம் 6,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்றும் (06) அதன் விலையில் மேலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Exit mobile version