இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 17, வெள்ளிக்கிழமை) 4 இலட்சம் ரூபாயைத் தாண்டி அதிர்ச்சியளித்துள்ளது.
செட்டியார்தெரு தங்க சந்தை தகவல்களின்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்று (அக்டோபர் 16, வியாழக்கிழமை) இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் 15 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் இன்று 13 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்து, 3 இலட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.