03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

Share

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (19) நண்பகல் அளவில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி,

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 13,000 ரூபாவினால் குறைவடைந்த நிலையில் 362,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9,000 ரூபாவினால் குறைந்திருந்ததுடன், அந்த நிலை தொடர்ந்தமையால் நண்பகல் வேளையில் மேலும் 4,000 ரூபாவினால் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று (18) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 374,400 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இன்று அது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று 407,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 394,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...