thisha
செய்திகள்அரசியல்இலங்கை

உடன் தேர்தலுக்குச் செல்லுங்கள்! – எதிர்க்கட்சி அரசிடம் வலியுறுத்து

Share

‘அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து சம்பந்தமாக ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

‘சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்துக்கும் ஐந்தாண்டுகள்தான் மக்கள் ஆணை உள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பினை அரசு உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் ஆட்சிக் காலத்தை நீடிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

அரசினை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது எமது பலத்தையும் காட்டுவோம்’ – என்று தெரிவித்துள்ளார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...