16386e64 6e05 4b47 a89b
இந்தியாசெய்திகள்

டெல்லியில் உலகத் தலைவர்களின் சங்கமம்: இந்தியாவிற்கு வருகை தரும் மேக்ரான் மற்றும் அநுர குமார!

Share

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் எதிர்வரும் பெப்ரவரி 17 முதல் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் வருகை தரும் மேக்ரான், புதுடெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் (AI Impact Summit) பங்கேற்கவுள்ளார். அத்துடன், இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்குச் செல்லும் அவர், அங்கு பிரதமர் மோடியுடன் இணைந்து ‘இந்தியா – பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டை’ (India-France Year of Innovation) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். இந்த உயர்மட்டப் பயணங்களின் போது, இந்தோ-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, சிறிய ரக அணு உலைகள் (SMR) தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்துத் தலைவர்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். குறிப்பாக, கடந்த ஆண்டு மோடி பிரான்ஸ் சென்றபோது கையெழுத்தான பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மேக்ரான்-மோடி சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...