6 21 scaled
இந்தியாசெய்திகள்

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுங்க! வழிமறித்த பெண்கள்

Share

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுங்க! வழிமறித்த பெண்கள்

தமிழக மாவட்டம் தென்காசியில் மகளிர் உரிமைத் தொகை கொடுங்க முதல்வர் மகனே என்று கையில் பதாகைகளை ஏந்தியபடி அமைச்சர் உதயநிதியை வழிமறித்து பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

பின்பு, யாரெல்லாம் இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறலாம் என்று பயனாளிகளுக்கான தகுதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அவர், தென்காசி அருகே வந்து கொண்டிருந்த போது 10 -வது வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் தலைமையில் 50க்கும் அதிகமான பெண்கள் அமைச்சரின் காரை வழிமறித்தனர்.

அப்போது, அவர்களை பார்த்து காரை நிறுத்திய அமைச்சரிடம், “முதல்வர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தும் முறையான விசாரணை எங்களுக்கு வரவில்லை. நாங்கள் அதற்கு தகுதியானவர்கள். எங்களுக்கும் உரிமைத் தொகை ரூ.1,000 தர வேண்டும்” என்று அங்கிருந்த பெண்கள் கூறினர்.

பின்பு, பெண்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய விசாரணை மேற்கொள்வதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...