நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் (Carsten Breuer) எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தனது ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனி அரசாங்கம் கட்டாய ராணுவ சேவை திட்டத்தை (Compulsory Military Service) அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவப் பரிசோதனையை (Medical Test) எடுக்க வேண்டும்.
இந்த ராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும் இருக்கும். பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஜெர்மனி ராணுவத்தில் தற்போது சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய ராணுவ சேவைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.