ஜேர்மனி மீண்டும் கொரோனா பிடிக்குள் சிக்கியுள்ளது.
ஜேர்மனியில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 65,000ஐ கடந்து பதிவானதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அங்கு குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முடக்க நிலையைத் தவிர்ப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை பெல்ஜியம் அறிவித்துள்ளது.
10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளக பகுதிகளிலும் முகக்கவசங்களை அணிதல் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுவதை கட்டாயமாக்குதல் முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் கொரோனா சாவுகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
நாளாந்த சாவுகளின் எண்ணிக்கை இரண்டாவது நாளாகவும் 1,200ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world