ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் குறித்த ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளது.
இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் இவ் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமை தாங்கும் குறித்த குழு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களில் ஏற்கனவே ஆய்வின் மூலம் சாட்சிகளை திரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews