கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் (CCD) மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு அதிகாரிகளும் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை நாளை (ஜனவரி 26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த அதிகாரிகள் கடமையின் போது கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

