FF3GdApX0AYiTCU
செய்திகள்விளையாட்டு

ஜப்னா கிங்ஸை சுழலில் சுருட்டிய காலி கிளாடியேட்டர்ஸ்!!!

Share

நேற்று ஆரம்பமான எல்.பி.எல் போட்டியில் ஜப்னா கிங்ஸை 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

லங்கா பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால போட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் அணித்தலைவர் பாணுக ராஜபக்ச 56 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

165 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக வகாப் றியாஸ் 27 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய, நேற்றைய போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக சமித் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.
#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...