18 02 2025 GP parliament
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை சட்டவிரோத புத்தர் சிலை அகற்றம்: சாதாரண சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை, இனவாத காடையருக்கே பின்வாங்கியது துரோகம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசம்!

Share

திருகோணமலையில் (திருமலை) சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரம் தொடர்பாக, அரசாங்கத்தின் பின்வாங்கல் நடவடிக்கையைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (நவம்பர் 17) பாராளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றினார்.

நீதி அமைச்சு மீதான விவாதத்தின்போது அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நவம்பர் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது:

“சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.”

“நீங்கள் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!”

சட்டவிரோதச் செயலை எதிர்த்தவர்களுக்கு அஞ்சி அரசாங்கம் பின்வாங்கியதைக் கஜேந்திரகுமார் கடுமையாக விமர்சித்தார்.

“அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது. அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.”

“உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில், மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும்.”

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...