ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது, யாழ் மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த மைத்திரிபாலசிறிசேன, யாழ் மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி, பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews