எதிர்க்கட்சிகளின் சில குழுக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணி நடத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையில், இடையிடையே கருத்துத் தெரிவித்த அவர்,
“மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காகச் சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்,”என்று குறிப்பிட்டார்.
இந்தக் கருத்து, நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணி மற்றும் அதன் அரசியல் பின்னணி குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.