கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

Romance Scams in Canada 1024x560 1

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் காவல்துறைனர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அண்மையில், நோர்த் பே பகுதியில் வசிக்கும் பொதுமகன் ஒருவரிடமிருந்து 250,000 டொலர் ($250,000) பணமோசடி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களில், கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டைப் (Gift Card) மோசடிகள் தொடர்பான பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்துள்ளார். இது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன், தற்போது மோசடிகள் மிகவும் நூதனமான முறையில் இடம்பெறுவதாகவும், பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் அந்நாட்டுக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version