விடாமல் தாக்கிய நான்கு சூறாவளிகள் – ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவு

h

hurricanes

அமெரிக்காவில் விடாமல் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியால் 50 பேர் சாவடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு சூறாவளிக் காற்று அம்மாகாணத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

இதன் காரணமாக பல கட்டிடங்களும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இச்சூறாவளியில் சிக்கி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவடைந்திருக்கலாமென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்றால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாவடைந்தோரின் எண்ணிக்கை 100 ரை தாண்டலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்.

கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சூறாவளி இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேபீல்டு நகரத்தில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேல் பகுதி சேதம் அடைந்ததன் காரணமாக இந்த உயிர் சேதம் ஏற்பட்டு விட்டதாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை போல இல்லினாய்சில் ஒரு பெரிய அமேசான் குடோனை சூறாவளி தாக்கியதாகவும், அங்கு சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும் சேத நிலவரம் குறித்த தகவல் எதுக்கும் தெரியவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#WORLD

Exit mobile version