25 6920040ee569d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் அச்செழுவில் சோகம்: கள்ளுத்தவறணையில் வைத்துத் தாக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்துத் தாக்கப்பட்டதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (நவம்பர் 20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச் சென்றபோது, அங்கு கள்ளு அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பல

னின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இச்சம்பவம் குறித்துச் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...