சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

24 6694ccce98702

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா குழுவைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட ஒரு குழு சிலாபத்திற்குச் சுற்றுலா வந்திருந்தது. இவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்றிருந்தபோது, 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, காணாமல் போன ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறை, காவல்துறை உயிர்காப்புப் பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Exit mobile version