79 மில்லியன் பெறுமதியுடைய ஐஸ் போதையுடன் நால்வர் கைது!

79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தலைமன்னார்– ஊருமலை கடற்கரையில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடமத்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே நேற்று நள்ளிரவு இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

டிங்கி ரக படகின் மூலம் போதைப்பொருளை கொண்டுவந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

NEWS

Exit mobile version