இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 மூலம் அவர் சென்னை நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.
அவர்களது தனிப்பட்ட விஜயமா அல்லது உத்தியோகபூர்வ விஜயமா என்பது குறித்த மேலதிகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

