இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் இன்று (நவம் 22) மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தம்பதியினர் திருமண விழாவில் கலந்துகொள்வதற்கு முன்னர் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.