தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் தான் கலந்துகொள்ளவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆசி பெறுவதற்காகச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த எதிர்ப்புப் பேரணியில் நேரடியாகப் பங்கேற்பது, தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தும் முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.