முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

24 670f93e6eb8ad

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, பின்வரும் விடயங்கள் தொடர்பாக அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன:

‘ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட்’ (Happiness Institute) நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி மற்றும் பல வாகனங்களை அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான முறையில் பயன்படுத்தியமை. சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் சட்டவிரோதமான முறையில் முறைகேடுகளைச் செய்தமை.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீண்டகாலமாகத் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

 

Exit mobile version