முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது: டிசம்பர் 16 வரை விளக்கமறியல்!

MediaFile

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (டிச 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
அங்கு அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Exit mobile version