ஊழல் குற்றச்சாட்டுகள்: புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் உட்பட இரு முன்னாள் உயர் அதிகாரிகள் கைது!

image a376c13e7f

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரும் இன்று (3) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரம இன்று காலை 9.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அதேபோல, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version