இனி நாட்டிற்குள் வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை!

image e820d5a174

Omicron அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்குள் வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போதே இதனை குறிப்பிட்டார்.

Omicron வைரஸ் பிறழ்வானது தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Omicron வைரஸ் பிறழ்வானது ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருக்கும் தொற்றக்கூடும் என அவர் தெரிவித்தார்.

புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்களுக்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version