போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

images 2 2

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று (அக்டோபர் 23) கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளார்.

செனகல் நாட்டைச் சேர்ந்த 35 வயதான சந்தேகநபர் இன்று காலை 05.45 மணிக்கு இலங்கை எயார்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்டு, அவரை எல்லை கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்பச் சோதனைகளில், அவர் சமர்ப்பித்த பிரேசிலியக் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது பொதிகளை ஆய்வு செய்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான செனகல் கடவுச்சீட்டையும் மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கமைய, அவர் வந்த வழியே கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக இலங்கை விமான நிறுவன அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version