வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது! களு, களனி கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

MediaFile 3

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய முன் எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகப் பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பத்தேகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, பத்தேகமவில் அதிகபட்சமாக 172 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், இதன் விளைவாகக் களு, களனி கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயா, கிரிந்தி ஓயா ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக மழை பெய்யும்.

களனி, களு, கிங், அத்தனகலு மற்றும் நில்வலா ஆகிய நீர்நிலைகளில் தொடர்ந்து மழை அதிகரித்து பெய்து வருவதால், அந்தப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான அச்சம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிரிந்தி ஓயா மற்றும் லுனுகம்வெஹெர நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version