மகாவலி கங்கை பெருக்கெடுப்பு: 8 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; சோமாவதிய யாத்திரையைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

7003785 rain

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஆற்றின் கரையோரத் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுகிறது:

திருகோணமலை மாவட்டம்: கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில.
பொலன்னறுவை மாவட்டம்: வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ, திம்புலாகல.
மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரைக்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

சோமாவதிய ரஜ மகா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அடுத்த சில நாட்களுக்கு அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மகாவலி நதிக்கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version