தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்தது தொடர்பாக, ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
விசாரணையில் உயிரிழந்த தம்பதியினர் ‘உனகுருவே சாந்தா’ என்ற நபரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது இந்தக் கொலை பாதாள உலகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள், தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளைச் சீனிமோதரை (Seenimodara) பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்துத் தங்காலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.